எ-து சுரத்தருமைகூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத்
தோழி சொல்லியது.
குறிப்பு. புதுக்கலத்தன்ன கனிய ஆலம் - புதுப்பானையைப்
போன்ற நிறம் பொருந்திய பழத்தையுடைய ஆலமரம்; ? புதுக்கலம்
போலும் பூங்கனியாலும்? (சீவக. 2108). போகில் - பறவை; ஐங்
325 : 2. தடுக்கும் - வெளியிற் செல்லவிடாது தடுக்கும்; வேனிலின்
கொடுமை கூறப்பட்டது. தண்ணிய -குளிர்மை பொருந்திய.
எம்மொடு என்றது தலைவியைக் குறித்தது. தலைவியொடு செல்லின்
சுரம் இனியதாகு மென்றபடி; ஐங். 322, 327. (பி-ம்) 1‘போகினினை
2‘லடுஞ்சுரம்? ( 3 )