எ-து பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்
லியது.
(ப-ரை) ‘வல்லாதீமே’ என்றது எல்லாம் வல்லாயாயினும் இது
மாட்டாயாதற்கு மேற்பட்ட தலைமையில்லை (எ-று).
குறிப்பு. கோவலர் கோலால் தோண்டிய. நீர்ப்பத்தல் - நீர்ப்பள்
ளத்தை. யானை பத்தல் நீரை வௌவுதல் : நற். 92 : 5-7; 240 :
7-9. கல் அதர்க்கவலை-கல் நிறைந்த கவர்த்த வழியில். யுயல் நெடுங்
கூந்தல் - மேகம் போன்ற நெடிய கூந்தலையுடைய தலைவி. தோன்
றல் : விளி. வல்லாதீமே - வல்லமையில்லாயாயிரு ; மே : அசை.
(பி-ம்) 1‘ஆனீர்ப்பதலை’ 2 ‘செலவின் மெல்லியற்’, ‘செல்லு
மெல்லியல்’, ‘சொல்லு மெல்லியல்’ ( 4 )