305

4 பாலை

(31) செலவழுங்குவித்த பத்து


305. களிறு பிடிதழீஇப் பிற1புலம் படராது
    பசி தின வருந்தும் பைதறு குன்றத்துச்
    2சுடர்த்தொடிக் குறுமக ளினைய
    எனைப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.

   எ-து உடன் போக்கொழித்துத் தனித்துச் செல்வலென்ற தலை
மகற்குத் தோழி கூறியது.

  குறிப்பு. பிறபுலம் - வேற்றிடம். படராது - செல்லாமல். பசிதின-
பசிநோய் தன்னை வருத்த. பைதறுகுன்றம் - பசுமையற்ற குன்றத்
தின் கண்; பைது; ஐங். 317 : 2; பதிற். 23 : 3. இனைய. வருந்த.
எனைப்பயம் - என்ன பயனை. நின்செலவு என்ன பயனைச் செய்யுமோ.
பசி வருத்தவும் பிறபுலம் களிறு படராது என்றது நீயும் அவ்விதம்
இருக்கக் கடவை யென்றவாறு.

   (பி-ம்) 1‘புலம்படர்ந்து’ 2 ‘ சுடர்க்கொடிக்’ ( 5 )