எ-து பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை
கூறியது.
குறிப்பு. வியன்சுரன் - பெரிய பாலைநிலத்தை. இறப்பின் -
கடந்து சென்றால். காழ் - வடங்கள் பல்காழல்குல் : பொருந.39.
அவ்வரி - அழகிய வரிகள். அல்குல் வரிவாட : ஐங் 316 : 2. இனைகு
வள் - அழுது இரங்குவாள். இனைதற்குக் குழல் : நற். 113 : 11;
“குழலினை வதுபோ லழுதனள்” (புறநா. 143 : 15); சீவக. 2945.
விழவொலி கூந்தல் - விழாவைப் போலும் (நறுமணங்கமழும்)
தழைத்த கூந்தல்; மலைபடு. 30. மாஅயோள் - மாமை நிறத்தை
யுடைய தலைவி; ஐங். 324 : 5. நீசுரன் இறப்பின் மாஅயோள்
பெரிது இனைகுவள்.
(மேற்.) மு. இதனுள் குழலினும் இரங்குவளென்று பிரிந்தவள்
இரங்குதற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமந் தலைவற்குக்
கூறினாள் (தொல். அகத். 39, ந.) (பி-ம்.) 1‘யவிழொலி கூந்தல்’ ( 6 )