எ-து ‘பிரிவல்? என்ற தலைமகற்குத் தோழி, ‘பிரியாதொழியப்
பெறின் நன்று; பிரிவையாயின் இப்பருவத்து இம்மாமலை எங்களை
விட்டுப் பிரிந்தாற் பிரி? எனச் சொல்லியது.
குறிப்பு. பல்லிருங்கூந்தல் - பலவாகிய பெரிய கூந்தல்; ஐங்.
429 : 1; குறுந். 19 : 5; நெடுநல். 54; கலித். 101 : 41-2: அகநா.
43 : 11 மணி. 22 : 130; சீவக. 164, 989. மெல்லியலோள்வயின் -
தலைவியிடத்தினின்றும். இணர் - கொத்து. ஏறுழ் ஒள்வீ - ஒளி
பொருந்திய எறுழமலர் : குறிஞ்சி. 66. தாஅய - பரந்த. முருகு -
முருகக்கடவுள். பிரிந்தென - பிரிய. பிரிமே - பிரிவாயாக.
(பி-ம்.) 1‘காலுறழொள்வீ? 2 ‘முருகமாமலை? ( 8 )