எ-து பிரிகின்ற தலைமகற்குத் தோழி, ‘நீ நினைக்கின்ற கருமம்
முடித்தாயாயினும் இவள் நலம் மீட்டற்கு அரிது’ எனச் சொல்லிச்
செலவழுங்குவித்தது.
குறிப்பு பொலம்பசும் பாண்டிற்காசு-பொன்னாலான பசுமை
யான வட்டக்காசுகள்; பாண்டில்-வட்டம்; ஐங். 316 : 1; பதிற்.
90 : 35; இழை நெகிழ்தல் : குறுந். 188 : 3. வல்லுவையாயின்-
வல்லாயாயின்; கலித். 24 : 9. விடலை : விளி. நுதற்கவின் அரிது;
நுதற்கவின்; குறுந். 109 : 4;கலித் 53 : 24.
( 10 ) (31) செலவழுங்குவித்த பத்து முற்றிற்று.