எ-து தலைமகளைச் சூளினால் தெளிந்தானென்பது கேட்ட காதற்
பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச்
சொல்லியது.
குறிப்பு. மகிழ்நன்-மருதநிலத் தலைவன். நயந்தோர்-தன்னை
விரும்பிய மகளிருடைய. பயந்து-பசலை பூத்து. பனி மல்க-நீர்
நிறையும்படி. வல்லன் என்ற அடுக்கு இடைவிடாமைப் பொருட்
கண் வந்தது. தேற்றான்-அறியான்; தன்வினைப் பொருளில்
வந்தது; “தேற்றாய் பெரும பொய்யே” (புறநா. 59:4). சூள் வாய்த்
தல்-சூளின்படி நடத்தலை. மகிழ்நன், பொய்த்தல் வல்லன், சூள்
வாய்த்தல் தேற்றான்.
காதற் பரத்தை: சேரிப் பரத்தையின் மகளாகித் தலைவனையே
விரும்பிப் பிறரை விரும்பாதிருப்பவள். (பி-ம்) 1 ‘பசந்து’ ( 7 )