365

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


365. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
    1நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பும்
    2நலமா ணெயிற்றி போலப் பலமிகு
    நன்னல நயவர வுடையை
    என்னோற் றனையோ மாவின் றளிரே.

     எ-து வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்
சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது.

   குறிப்பு. கணமா - கூட்டமான மான்களை. தொலைச்சி - கொன்று
தன்னையர் - தன்னுடன் பிறந்தோர். வல்சி - உணவின்கண். படுபுள்
ஓப்பும் - வருகின்ற புள்ளை விரட்டும். எயிற்றி : தலைவி. நன்னலம் -
நல்ல அழகு. நயவரவு - விருப்பம் வருதலை. எனநோற்றனையோ -
என்ன நோன்பு நோற்றனையோ, தளிரே : விளி

   (மேற்.) மு. இது வரைவிடை வைத்துப் போகின்றான் மாவினை
நோக்கிக் கூறியது (தொல். அகத். 22. .)

   (பி-ம்) 1‘நிணவூண்? 2‘அலமர லெயிற்றி போல நலமிக? ( 5 )