எ-து உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற்
பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்கக் கண்டார் கூறியது.
குறிப்பு. கோட்சுரும்பு - தேனைக்கொள்ளும் சுரும்பு. அரற்றும்-
ஒலிக்கின்ற. அமன்ற - நெருங்கிய. மராத்துக் குறுஞ்சினை-வெண்
கடம்ப மரத்தினது குறுகிய கிளையை. வலஞ்சுரி வாலிணர் -வல
மாகச் சுரித்த ஒளி பொருந்திய பூங்கொத்துக்களை, மரத்தின் வலஞ்
சுரி வாலிணர் ; ஐங். 348 : 2, குறிப்பு மள்ளன் - தலைவனது. பஞ்
சாய்ப் பாவை : ஐங். 155 : 5, குறிப்பு பாவையும் தலைவியும்:
குறுந். 278 : 3. அஞ்சு ஆய் கூந்தல்-ஆய்ந்த ஐம்பாலையுடையாள்.
ஆய்வது - வகுப்பது. கூந்தல் ஆய்வது கண்டு மள்ளன் உள்ளம்
மகிழ்கூர்ந்தன்று. (பி-ம்) 1‘கொண்டே? ( 3 )