எ-து குறியிடத்துவந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி
எதிர்பட்டு வரைவுகடாயது.
(ப-ரை.) ‘அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்? என்றது இவ்
வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகிய ஞான்று இவள் உயிர்வாழா
ளென்பதாம்,.
குறிப்பு. நல்குமதி வரைந்து அருளுவாயாக. அலவன்-நண்டு.
இறா-மீன் பிறழும்-துன்பத்தால் புரளும் நின்னலது இல்லா-உன்னை
யன்றி வேறு துணையில்லாத. இவள்-தலைவியது. நின்னலதில்
லாவிவள் : நற். 1 : 6-7, 189 : 1-2 ; 1-2 : குறுந். 309 : 8, 397 : 427
கலித். 21 : 12-3. நுதல் தொண்டியற்று. ( 9 )