370

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


370. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை
    இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
    1நீநயந் துறையப் பட்டோள்
    2யாவ ளோவெம் மறையா தீமே.

   எ-து பரத்தையொருத்திக்குப் பூவணிந்தானென்பது கேட்ட
தலைமகள், ‘அஃதில்லை’ என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது.

   (ப-ரை) இது பாலைக்குரிய கருப்பொருளாகிய கோங்கு கூறின
மையால் பாலை ஆயிற்று.

  குறிப்பு. வண்சினை - வளவிய கிளை. படலை - மாலையை. இருஞ்
சிறை-பெரிய சிறகு. நீ என்றது தலைவனை. நயந்து - விரும்பி.
உறைதல் - தங்குதல். எம் மறையாதீமே-எங்களுக்கு மறையாதே.

   (மேற்.) மு. இதில் பாலைக்கண் மருதம் நிகழ்ந்தது (தொல்.
அகத். 12, ந.); இ. வி. 394. (பி-ம்) 1‘நீநயந் துலையப்’
2‘யாரளோ’ ( 10 )

(37) முன்னிலைப்பத்து முற்றிற்று.