5. முல்லை
(41) செவிலிகூற்றுப் பத்து
409. புதல்வற் கவைஇயினன் றந்தை மென்மொழிப் புதல்வன் றாயோ விருவருங் கவையினள் இனிது மன்றவவர் கிடக்கை 1நனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே.
குறிப்பு. தந்தை புதல்வனைக் கவையினன், இருவரும்-தலைவனையும் புதல்வனையும். அவர் கிடக்கை இனிது. இவ்வுலகுடன்-இவ்வுலகமுழுதும்; ?உலகுடன் விளக்கும்? (யா. கா. 14, மேற்.) உறுமே : ஒக்கும்; ஏ, அசை. மு. ஒப்பு. குறுந். 359 : 4-6.
(பி-ம்.) 1 ‘நளி ? ( 9 )