178


(18) தொண்டிப் பத்து


178. தோளுங் கூந்தலும் பலபா ராட்டி
   வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற்
   குட்டுவன் றொண்டி யன்ன
   எற்கண்டு 1நயந்துநீ நல்காக் காலே.

 எ-து தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லி
யது.

  (ப-ரை.) ‘செங்கோற் குட்டுவன் தொண்டியன்ன என்’
என்றது தன்னைத் தேறுதற் பொருட்டுத் தன்செப்பம் கூறியவாறு.

  குறிப்பு. வாழ்தல் ஒல்லுமோ-உயிர் வாழ்தல் பொருந்துமோ.
குட்டுவன் தொண்டி-குட்டுவனது தொண்டியென்ற நகரம். எற்
கண்டு-என்னைப் பார்த்து. நயந்து-விரும்பி நீ என்றது தோழியை
நோக்கி. நல்காக்கால்-அருளாவிடின். நீ நல்காக்கால் வாழ்தல்
ஒல்லுமோ?

   செப்பம்-நடுவுநிலை : பட்டாங்கு எனலுமாம்; திருச்சிற், 27,
உரை : சீவக. 1364 ந.

   (மேற்.) மு. தோழியைக் குறையுறும் பகுதி (தொல். களவு. 12,
இளம்.) மதியுடம்பட்ட தோழி நீர் கூறிய குறையை யான் மறந்தே
னெனக் கூறுமாயின் அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால்
தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும் அவள் அதனை ஆற்றியிருந்த
பெருமையையும் தலைவன் கூறுதல் (தொல். களவு. 11, ந.)
பாங்கிக்குத் தலைவன் தன்னிலை சாற்றல் (இ.வி. 509.)

    (பி-ம்.) 1 ‘மயங்கி நீ’ ( 8 )