எ-து இடைச்சுரத்து வெம்மை ஆற்றனாகிய தலைமகன் தலைமகள்
குணம் நினைந்து நொந்து சொல்லியது.
குறிப்பு. அழலவிர் நனந்தலை -நெருப்புப் பரந்த அகற்சியை
யுடைய இடம்; நனவென்பது அகலமென்னும் குறிப்புப்பொருளை
உணர்த்துவதோர் உரிச்சொல் ; ?நனந்தலையுலகம்? (முல்லை.1)
பெறாது - பெறாமல் மடமான் அம்பிணை-மடம் பொருந்திய அழகிய
பெண்மான். மறியொடு திரங்க-தன் குட்டியொடு உலர; திரங்கல்-
உலர்தல்: மலைபடு. 431; புறநா. 177 : 2 இயவின் - வழியால்.
இன்னா-துன்பத்தைத் தருவன. ஓழிந்தோள்-நீங்கியோள் ;தலைவி.
சுரம் இன்னா. பண்பு இனிய. ( 6 )