எ-து மீண்டுவந்த தலைமகன் அவளைப் பிரிகின்றகாலத்துச்
சுரத்துச் சேய்மையும் வருகின்ற காலத்து அதன் அணிமையும்
கூறியது.
குறிப்பு. வேட்கையமாகி - விருப்பத்தை உடையேமாகி நிற்
றுறந்து-நின்னைத் துறந்து. அதர்-வழி. தவநனி நெடிய- மிகவும்
நீண்டன. அணியிழை-தலைவியை, உள்ளி - நினைந்து. நணிய.
அண்ணியதாக. ஆறு பிரிந்தகாலை தவநனி நெடியவாயின, அணி
யிழை உள்ளிவருதலின் நணியவாயின. ( 9 )