363

4 பாலை

(37) முன்னிலைப் பத்து


363. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
    1கொலைவி லெயினர் தங்கைநின் முலைய
    சுணங்கென 2நினைதி நீயே
    அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே.

   எ-து புணர்ந்துடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத்
தலைமகளை நலம் பாராட்டியது.

   குறிப்பு. சிலைவில் -சிலைமரத்தாற் செய்த வில்; சிலை -ஒரு மரம்;
கலித். 15 : 1, ந; குறுந். 385 : 2; முழங்கும்வில் எனலுமாம். செந்
துவராடை எயினர் : நற். 33 : 6. கொலைவில் எயினர் என்றது
எயினர் என்னும் துணையது. எயினர் தங்கை : ஐங். 364 : 1; குறுந்.
335 : 6 நினைதி- நினைக்கிறாய். அணங்குறு நெஞ்சு - துன்புற்ற
நெஞ்சம். நீ சுணங்கென நினைதி நெஞ்சு அணங்கென நினையும்.

   (மேற்) மு. இப்பாட்டுள் ‘கொலைவிலெயினர் தங்கை? எனப்
புணர்தற் பொருண்மை வந்ததாயினும் பாலைக்குரிய மக்கட் பெயர்
கூறுதலின் பாலையாயிற்று (தொல். அகத். 24, இளம்). உடன்
போகின்றான் நலம் பாராட்டியது (தொல். அகத். 22, ந.). இப்பாலைப்
பாட்டினுள் புணர்தலென்னும் உரிப்பொருள் வந்தது (நம்பி ஒழிபு.
42) (பி-ம்) 1‘கொலைவல்? 2‘நினைத்தி? ( 3 )