446

5. முல்லை

(45) பாசறைப் பத்து


446. முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை யருந்தொழி லுதவிநம்
காதனன் னாட்டுப் போதரும் பொழுதே.

   எ-து பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவவரவின்கண்
உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது.

   குறிப்பு. பாசறை : மூங்கிலால் கட்டப்பட்ட அறைகளையுடை
யது; பாசு-மூங்கில். காதல் நன்னாட்டு-அன்பு பொருந்திய நல்ல
நாட்டின்கண். போதரும் பொழுது-போகும்பொழுது. மாயோயே,
போதரும் பொழுது நல்ல காண்குவம்.

   (மேற்.) மு. வேந்தற் குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண்
உருவு வெளிப்பட்டுழிப் புலம்பியது; உதவி என்றலின் வேந்தற்கு
உற்றுழியாறிற்று (தொல். அகத். 41, ந.) தலைவன், உருவு வெளிப்
பாடு கண்டு சொல்லியது. (நம்பி. கற்பு. 10) ( 6 )