450

5. முல்லை

(45) பாசறைப் பத்து


450. 1முரசுமா றிரட்டு மருந்தொழிற் பகைதணிந்து
    நாடுமுன் னியரோ பீடுகெழு வேந்தன்
    வெய்ய வுயிர்க்கு 2நோய் தணியச்
    செய்யோ 3ளிளமுலைப் படீஇயரென் கண்ணே.

    எ-து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுற்றாமை
யிற் பாசறைக்கண் இருந்து தன் மனக்கருத்து உரைத்தது.

   குறிப்பு. முரசு மாறிரட்டும்-முரசு மாறி மாறி ஒலிக்கின்ற.
முன்னியர்-நினைப்பானாக. வெய்ய உயிர்க்கும் நோய்-வெம்மையான
பெருமூச்சைச் செய்யும் நோய் ; காமம். செய்யோள்-தலைவியினது.
படீஇயர்-தூங்குக ; ஐங். 142 : 3, குறிப்பு. வேந்தன் நாடு முன்னியர்.
என்கண் முலைமிசைப் படீஇயர்.

   (பி-ம்.) 1 ‘முரசமாறு’ 2 ‘நோதணிய’ 3 ‘ளிடைமுலை’ ( 10 ) (45) பாசறைப் பத்து முற்றிற்று.