477

5. முல்லை

(48) பாணன் பத்து


477. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
   துனிமலி துயரமொ டரும்பட ருழப்போள்
   கையறு 1நெஞ்சிற் குயவுத்துணை யாகச்
   சிறுவரைத் தங்குவை யாயின்
   காண்குவை மன்னாற் பாணவெந் தேரே.

    எ-து தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன்
கூறியது.

   குறிப்பு. கண்ணில் பசலை பரவ. துனி-வெறுப்பு. படர்உழப்
போள்-நோயால் வருந்துபவளது. கையறு நெஞ்சிற்கு-செயலற்ற
மனத்துக்கு. உயவுத்துணையாக-உசாவுதலையுடைய துணையாக;
குறுந். 207 : 4 அகநா. 103 : 12, 298 : 22. சிறுவரை-சிறியதாகிய
காலத்தளவு. பாண, எம் தேரைக் காண்குவை. மன்; ஆல் :
அசைகள்.

    (மேற்.) மு. இது தூதுவிடும் தலைமகன் கூறியது. (தொல். அகத்.
48. இளம்.; 41, ந,). (பி-ம்) 1 ‘நெஞ்சத் துயவுத்துணை யாகிச்? ( 7 )