5. முல்லை
(49) தேர்வியங்கொண்ட பத்து
482. தெரியிழை யரிவைக்குப் பெருவிருந் தாக வல்விரைந்து கடவுமதி பாக 1வெள்வேல் வென்றடு தானை வேந்தனொடு நாளிடைச் சேப்பி னூழியி னெடிதே.
குறிப்பு. இழை-ஆபரணம். வல்விரைந்து-மிகவிரைந்து. கடவுமதி-செலுத்துவாயாக. வெள்வேல்-வெள்ளிய வேல். சேப்பின்-தங்கினால். ஊழியின்-ஊழிக்காலத்தினும். நெடிதே-நீண்ட தன்மையையுடையது.
(பி-ம்.) 1 ‘வென்வேல்? ( 2 )