5. முல்லை
(49) தேர்வியங்கொண்ட பத்து
485. அரும்பட ரவல மவளுந் தீரப் பெருந்தோ ணலம்வர யாமு முயங்க ஏமதி வலவ தேரே மாமருண் டுகளு மலரணிப் புறவே.
குறிப்பு. அவலம்-துன்பம். அரும்படரவலம்; கலித். 28 : 10. நலம்வர-இழந்தநலம் வர. ஏமதி-செலுத்துவாயாக; ஐங். 487; நற் 21 : 5; அகநா. 134 : 9. மா-மான்கள் உகளும்-துள்ளும் புறவின்கண் ஏமதி. ( 5 )