5. முல்லை
(49) தேர்வியங்கொண்ட பத்து
487. இதுமற் பிரிந்தோ ருள்ளும் பொழுதே செறிதொடி யுள்ள முவப்ப மதியுடை வலவ வேமதி தேரே.
குறிப்பு. பிரிந்தோரை உள்ளும்பொழுது இதுமன் ; உள்ளும்-நினைக்கும். செறிதொடி-தலைவி. தேரை ஏமதி ; ஏமதி-செலுத்துவாயாக. ( 7 )