5. முல்லை
(49) தேர்வியங்கொண்ட பத்து
488. கருவி வானம் பெயறொடங் கின்றே பெருவிறற் காதலி கருதும் பொழுதே விரியுளை நன்மாப் பூட்டிப் பருவர றீரக் கடவுமதி தேரே.
குறிப்பு. கருவி-தொகுதி. பெயல்-மழையை, பெருவிறற் காதலி-கற்பினால் உண்டான வெற்றியையுடைய தலைவி. உளை-பிடரிமயிர். பருவரல்-துன்பம் பொழுதின்கண் பருவரல் தீரக்கடவுமதி. ( 8 )