குறிப்பு. அஞ்சிறை வண்டின் அரிஇனம்-உள்ளிடத்தே சிறகை
யுடைய வண்டின் அழகிய கூட்டம் ; 'அஞ்சிறை வண்டி னரிக்
கணம்” (முருகு. 76, ந,) முல்லை மலரும் மாலையின்கண் ; குறுந்.
234 : 2-3. பையுள்-நோய். தையல்-தலைவி, உவப்ப-மகிழ இயக்கி-
இயங்குவித்து. பரி-செலவு உவப்ப விரைந்து கடவுமதி. ( 9 )