5. முல்லை
(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து
495. 1செந்நில மருங்கிற் பன்மலர் தாஅய்ப் புலம்புதீர்ந் தினிய வாயின புறவே பின்னிருங் கூந்த னன்னலம் புனைய உள்ளுதொறுங் கலிழு நெஞ்சமொடு முள்ளெயிற் றரிவையாம் வந்த2மாறே
இதுவுமது
குறிப்பு. தாஅய்-பரந்து. புலம்பு-துன்பம். புறவு இனிய வாயின. பின்னிருங் கூந்தல்-பின்னுதலுற்ற பெரிய கூந்தலையுடைய தலைவியது. கலிழும்-கலங்கும். அரிவை : விளி. வந்தமாறு-வந்தமையால்
(பி-ம்.) 1 ‘சென்னில? 2 ‘வாறே? ( 5 )