480

5. முல்லை

(48) பாணன் பத்து


480. நினக்கியாம் 1பாணரே மல்லே மெமக்கு
   நீயுங் குருசிலை யல்லை மாதோ
   நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி
   ஈரித ழுண்க ணுகுத்த
   பூசல் கேட்டு மருளா தோயே.

    எ-து தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கண் சென்ற பாணன்
தலைமகனை நெருங்கிச் சொல்லியது.

    குறிப்பு. குருசிலை அல்லை-தலைவனாக உள்ளாய் இல்லை, காதலி-
தலைவி. மனைக்கண் புலம்பி. ஈரிதழ் உண்கண்-ஈரம்பொருந்திய
இமையையுடைய மையுண்ட கண்கள், உகுத்த-சிந்திய. பூசல்-
வருத்தத்தை-அருளாதோய் : தலைவனை நோக்கிய விளி.

    (மேற்.) மு. பிரிவின்கண் பாணர்க்குக் கூற்று நிகழும் (தொல்.
அகத். 45, இளம்.) (பி-ம்.) 1 பாணரு ( 10 )

(48) பாணன் பத்து முறறிற்று.