316

4 பாலை

(32) செலவுப் பத்து


316. பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத்
   தேரக லல்கு லவ்வரி வாட
   இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்
   புல்லரை யோமை நீடிய
   புலிவழங் கதர 1கானத் தானே.

   எ-து தலைமகள் மெலிவிற்கு நொந்து தலைமகன் பிரிவின்கண்
தோழி கூறியது.

   குறிப்பு. பாண்டில் - வட்டமான. பொலங்கலம் - பொன்னா
பரணம். பொலங்கல அல்குல் : ஐங். 310 : 1. நந்த - பொலிவழிய.
தேர் அகல் அல்குல் - தேர்போன்று அகன்ற அல்குல். அல்குல் அவ்
வரி : குறுந். 101 : 5, 180 : 5-6 அல்குல் அவ்வரி வாட : ஐங். 306 :
2, குறிப்பு. புல்லரை ஓமை - புல்லிய அரையையுடைய ஓமை மரம்:
குறுந். 79 : 2, 260 : 8 அதர் - வழி. கலம் நந்த வாடக் கானத்தான்
இறந்தோர்.

    (பி-ம்) 1‘கானகத்தானே? ( 6 )