213

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


213. நறுவடி மாஅத்து மூக்கிறு புதிர்ந்த
   ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்
   உறைவீ ழாலியிற் றொகுக்குஞ் சாரல்
   மீமிசை நன்னாட் டவர்வரின்
   யானுயிர் வாழ்தல் 1கூடு மன்னாய்.

  எ-து ‘வரைவொடுவருதலைத் துணிந்தான்? என்பது தோழி
கூறக்கேட்ட தலைமகள் சொல்லியது.

 (ப-ரை.) மாவின் மூக்கு இற்று உதிர்ந்த வடுக்களை ஆலி
போலத் தொகுக்கும் நாட்டையுடையாரென்றது விரும்புவனவற்
றுக்குத் தாமாக முயலாது பெற்றுழிப் பேணும் இயல்பையுடையார்
எ-று

  குறிப்பு. . நறுவடிமாத்து-நல்ல மணம்பொருந்திய வடுக்களை
யுடைய மாமரத்தினது; ஐங். 61 : 1, குறிப்பு. மூக்கிறுபு-மூக்கு
இற்று; நற். 24 : 3. உறைவீழ் ஆலியின்-மழைத்துளியுடன் வீழ்
கின்ற ஆலங் கட்டியைப்போல.
  இயல்புடையாரென்றது தலைவியினது தந்தை முதலியோரை.
   (பி-ம்.) 1 ‘கூடலா மன்னாய்?   ( 3 )