476

5. முல்லை

(48) பாணன் பத்து


476.கருவி வானங் கார்சிறந் தார்ப்பப்
   பருவஞ் செய்தன பைங்கொடி முல்லை
   பல்லான் கோவலர் படலைக் கூட்டும்
   அன்பின் மாலையு முடைத்தோ
   அன்பில் பாண வவர்சென்ற 1நாடே.

    எ-து ‘பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே, நீ வேறுபடு
கின்றது என்னை?? என்ற பாணற்குத் தலைமகள் கூறியது.

    குறிப்பு. கருவி-மின் முதலியவற்றின் தொகுதி. பல்லான்
கோவலர்-பல பசுக்களையுடைய இடையர். படலை-தழைவிரவித்
தொடுத்த மாலையை, ?பல்லான் கோவலர்படலை சூட்ட? (புறநா.
265 : 4) மாலை-அந்திப்பொழுது. உடைத்தோ-உடையதோ.
அன்பில் பாண, நாடு மாலையும் உடைத்தோ.

    (பி-ம்) 1 ‘நாட்டே? ( 6 )