முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

'ஆயென' என்பதற்கு ஆயென்று பிறர்சொல்லவென்றும், ‘எமக்கீவோர் பிறர்க்கீவோர்'என்பதற்கு எமக்கீவோர் எம் வறுமைகண்டு வருத்தமுறுவோர்யாவர்க்கும் ஈவோரெனவும், 'பிறர்க்கீவோர் தமக்கீப'என்பதற்குப் பிறர்க்குக் கொடுப்போர் அக்கொடுக்கப்படுகின்றோர்தமக்கே கொடுப்போராவரெனவும் உரைப்பாரும் உளர்.

கசிவுற்றவென்பதற்கு இரக்கமுற்றவெனினும்அமையும்.

பேஎற்பகையெனவென்புழி எனவும் ஆங்கெனைப்பகையுமென்புழிஆங்கும் அசைநிலை.

கண் தெண்ணீரின் மல்கியெனவும்,வாயாரப் பெயரேத்தியெனவும் மாற்றப்பட்டன.

(கு - ரை.) 1. பத்தர் - யாழுறுப்பினுளொன்று.

4 - 5. புறநா.69 : 3 - 4, குறிப்புரை: 138 : 5.

10. 'செய்த' என்பதன் குறிப்பாய் 'அன்ன'என்பது வந்ததற்கு மேற்கோள்; தொல். வினை. சூ.37, ந; இ. வி.சூ. 243, உரை.

13. கூளியர் என்பதற்குச் சேவித்துநிற்போர் என்று திருமுரு காற்றுப்படையிலும்,நாடுகாக்கும் வேடர் என்று மலைபடுகடாத்திலும்,வேட்டுவர்என்று மதுரைக்காஞ்சியிலும்பொருள் செய்திருக்கின்றனர்நச்சினார்க்கினியர். "மகாஅ ரன்ன மந்தி" (சிறுபாண்.56) ; "கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன, நெடுங்கழைக்கொம்பர்க் கடுவனுகளினும்" (மலைபடு. 236 - 7)

11 - 4. "ஒப்போன் கூற்றென்றாரேனும்,சிறுபான்மை வலியாற் கொள்ளுமிடத்தும் தாவென்பதுவருமெனக் கொள்க; 'நின்னது....ஒன்றென்கோ'எனவரும்" (தொல், எச்ச. சூ. 50, ந.)

21 - 2. புறநா.134 : 1 - 2,குறிப்புரை.

23 : 4. புறநா. 140 : 6 - 8.

25. இச்செய்யுளைப் பாடிய புலவர் துறையூரினராதலின்அவ்வூர்த் துறைமணலைக் கூறினர்.

(136)

137

இரங்கு முரசி னினஞ்சால் யானை
முந்நீ ரேணி விறல்கெழு மூவரை
இன்னு மோர்யா னவாவறி யேனே
நீயே, முன்யா னறியு மோனே துவன்றிய
5கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பி னொலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரி னாளும்