முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

திணையும் துறையும் அவை.

இருங்கோவேள்பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது

(இ - ள்.) வெட்சியையுடையகாட்டின்நடுவண் வேட்டுவர் அலைப்பத் தனக்குப்புகலிடங் காணாத கடமாவினது நல்ல ஏறு வரைச்சாரன்மணிமேலே கிளம்பவும் சிதறிய பொன் விளங்கவும்விரையவோடும் நெடிய மலைப்பக்கத்து வெற்றிநிலைபெற்றசிறந்த புகழ்பொருந்திச் சிற்றரையம் பேரரையமென இருகூற்றாற்பெயர்பெற்ற உட்குப் பொருந்திய பழைய ஊரின்கட்பலகோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவியநீடியநிலையையுடைய அரையத்தினது கேட்டையும் இனிக்கேட்பாயாக; அதுகெடுதற்குக் காரணம்: நினது தாளால் தரப்பட்ட பொருளையன்றிநுந்தையுடைய உரிமையை நிறையப்பெற்ற தழைத்த கண்ணியையுடையபுலிகடிமாலே! நும்மையொக்கும் அறிவினையுடைய நும் குடியுள் ஒருவன், புகழ்ந்தசெய்யுளையுடைய கழாஅத்தலையாரென்னும்புலவரை அவமதித்ததனால்உண்டான பயன்; இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ! இவர்எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; பின்னைஇவர் கைவண்மையையுடைய பாரிமகளிரென்று சொல்லியஎனது தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே! யான் நின்னை விடைகொண்டேன்; நின்வேல் வெல்வதாக; அரைமலையில் முகையறமலர்ந்த கரிய காலையுடைய வேங்கையினது கரிய புறவிதழையுடைய ஒள்ளியபூப் பரந்த பொற்றைக்கல் பெரும்புலியினது வரியையுடைய புறத்தையொக்கும் பெரிய மலையிடத்து ஊர்களையுடைய நாட்டையுடையோய்!-எ - று.

புலிகடிமால்!அண்ணல்! நாடுகிழவோய்! அரையத்துக் கேடும் கேள்,இனி; அது கழாத்தலையை இகழ்ந்ததன்பயன்; இப்பொழுதுஎவ்வி தொல்குடிப் படீஇயர்; இவர் பாரிமகளிரென்றபுன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே! நின்னைவிடுத்தேன்;நின்வேல் வெல்வதாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

ஒலியற்கண்ணி -தளிர்மாலையெனினும் அமையும்.

நீடுநிலையரையத்துக் கேடும் கழாத்தலையை இகழ்ந்ததன்பயனென்ற உம்மையான், இவ்விகழ்ச்சியும் உனக்குக்கேடுதருமென்பதாயிற்று.

அதுகெடுதற்குக்காரணம், கழாத்தலையை நுமருள் ஒருவன்இகழ்ந்ததனால்; அவன் வாக்குத் தப்பாதாகலின்,அவன் வசையாகப் பாடினானென்று சொல்லுவர்; அதுவேயென்பதாம்.

‘வெலீஇயர்நின்வேல்’ என்றது குறிப்புமொழி.

‘நுந்தை தாய நிறைவுறவெய்திய’ என்பதூஉம், நும்போலறிவின்’ என்பதூஉம்இகழ்ச்சிதோன்ற நின்றன.