முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

யாவர்க்குக் கொடுப்பை? போரை விரும்பிய செல்வ! நீஅவர்க்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர்உவப்பப் பழியை உலகத்தே நிறுத்துவை; ஆதலான், ஒழிவதாகநின்னுடைய மறன்; கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக;நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அஞ்சினோர்க்குஅரணாகும் நினதடிநிழல் மயங்காமற் செய்தல்வேண்டும்,நல்வினையை; விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண்அமைந்தவர் விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள-எ - று.

மற்று : அசை. தில் :விழைவின்கண் வந்தது.

வானோருலகென்றது,ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது.

வேந்தே!நின்மறனொழிக; ஆன்றவர் விருந்தெதிர்கொளற்குநன்று செய்தல்வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்தெழுவாயாக; நின்னுள்ளம்வாழ்வதாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

செல்வமும்பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன.

எஞ்சுதல் -இவர்க்குப்பின்னும் நிற்றல்.

தாணிழல்மயங்காதென்பதற்கு நினக்கு ஒருதீங்கும் வாராமலென்றதாகக்கொள்க.

இனி ‘அதனா லன்ன தாதலுமறிவோய்’ என்றதற்கு உயர்ந்தோருலகம் எய்துவதுகாரணத்தால் அத்தாயம் அவர்க்கு அப்படியேயுரித்து;அன்னதாதல் நீயறிவையென முற்றாகவும், அழிந்தோர்க்குஏமமாகும் நின் தாணிழலென முற்றாக்கி மயங்காதுதெளிந்துநின்று நன்றுசெய்தல் வேண்டுமெனவும் உரைப்பாரும்உளர்.

‘மாவெங் காட்சியொடுமாறெதிர்ந் தெழுந்தவர்’ என்று பாடம் ஓதுவாரும்உளர்.

(கு - ரை.) 1. ‘‘மண்டமரட்ட களிறன்னான்” (கலித். 61)

3. புறநா. 18 : 11 - 12, 19 : 11, 201 : 17, 363 : 1.

9-10. புறநா. 27 : 7 - 9, குறிப்புரை.

10-11. புறநா. 75 : 1 - 2.

15-8. புறநா. 45 : 5-6.22-4. புறநா. 62 : 18 - 9.

(213)

214

செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்துநுகர்ச்சியுங் கூடும்