முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

நீரும் நிலனும் புணரியோர் உடம்பும் உயிரும் படைத்தோரெனவே செல்லுமுலகத்துச் செல்வமும், வித்திவானோக்கும் புன்புலம் இறைவன்றாட்கு உதவாதெனவே நீர்நிலைபெருகத்தட்டலால் வானோக்கவேண்டாத நன்புலம் இறைவன்றாட்கு உதவி ஞாலங்காவலர் தோள்வலிமுருக்குதலும், நிலனெளிமருங்கின் நீர்நிலைபெருகத் தட்டோர் இவட்டட்டோ ரெனவே நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன.

நீர்நிலைபெருகத்தட்கவே 1அறன்முதன்மூன்றும் பயக்குமென்பது கூறினமையான், இது முதுமொழிக்காஞ்சியாயிற்று.

(கு - ரை.) 1. ‘முழக்கு’ என்பது ஒலித்தற்றொழிற் பண்பை உணர்த்துதற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459.

5. ‘‘பல்வெள்ள மீக்கூற, வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக” (மதுரைக். 23 - 4) ; ‘‘அடையடுப் பறியா வருவி யாம்ப, லாயிர வெள்ளவூழி, வாழி யாத வாழிய பலவே” (பதிற். 63 : 19 - 21)

9. ‘‘ஆர லீன்ற வையவி முட்டை” (புறநா. 342 : 9)

10. கெடிறு: ‘‘இன்கெடிறு சொரிந்த வகன்பெரு வட்டி”, ‘‘காக்கை, இருங்கழி யினக்கெடி றாருந் துறைவன்” (ஐங்குறு. 47, 167)

11. வடி - திருத்தம்; ‘‘வடித்தேர்த் தானை” (மணி. 15 : 62)

14 - 5. ‘‘வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலு, நீர்சான் றுயரவே நெல்லுயருஞ் - சீர்சான்ற, தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும், ஓவா துரைக்கு முலகு” (சிறுபஞ்ச. 46)

16. புறநா. 50 : 14 - 5.

18. ‘‘நீரின் றமையா துலகு” (குறள், 20)

18 - 9. ‘‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம், உண்டி கொடுத்தோ ருயிர்க்கொடுத் தோரே” (மணி. 11 : 95 - 6)

20. ‘‘மக்கள் யாக்கை யுணவின் பிண்டம்” (மணி. 10 : 90) ‘‘இசைபடவாழ்வதற்குக் கல்வி ஆண்மை முதலிய பிறகாரணங்களும் உளவேனும் ‘உணவின் பிண்ட முண்டி முதற்று, ஆதலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக ஈதலென்றார்” (குறள், 231, பரிமேல்.)

24. ‘‘வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன், கோனோக்கி வாழுங்குடி” (குறள். 542)

28 - 9. ‘‘குளந்தொட்டு வளம்பெருக்கி” (பட்டினப். 284)

(18)

19

 

இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய

1. புறநா. 28 : 15