முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்
கறையடியானைக் கல்ல
துறைகழிப் பறியா வேலோ னூரே.

(பி - ம்.) 1 ‘பட்டவிரமான்’5 ‘லாப’

.....................................................................................................
...............................................................டார்கிழார்.

(கு - ரை.) 1. புலியினிடத்தேஅகப்பட்ட ஆமானினது கன்றினுக்கு.

2. மூதா - முதிய பசு. மடுத்து - சேர்த்து.

4. சுரக்கும் - இடைவிடாமல்அளிக்கும்.

7. வேலும்உறையும்: “நெய்துடைத்தடையலர் நேய மாதர்கண்,மைதுடைத் துறைபுகும் வயங்கொள்வேலினாய்” “பொய்யுரைத்துலகினிற் சினவினார்குலமறப் பொருது தன்வேல்,நெய்யுரைத் துறையினிட்டு”(கம்ப.நகர்நீங்கு. 159; யுத்த.மந்திர. 84.)

5 - 7. ‘பெயர்நிலைக் கிளவியினாஅ குநவும்’என்பதற்குத் தத்தம் பொருளுணர்த்தாதுபெயர்ந்தநிலைமையையுடைய சொல்லான் வருஞ் செய்யுளுமெனப்பொருள்கூறி,‘ஒள்வாட......வேலோனூரே :என்புழி, வேலோனென்பது வேலையுடையோனென்னும்பொருள்பெயர்ந்து ஒரு பெயர்த்தன்மையாய் நின்றது’என்பர்; தொல். எச்ச. சூ. 53, ந.; இ. வி.சூ. 370, உரை.

(323)

324

வெருக்குவிடை யன்ன வெகுணோக்குக் கயந்தலைப்
புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை யுடையின் சுரையுடை வான்முள்
5ஊக நுண்கோற் செறித்த வம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந் தழீஇய வங்குடிச் சீறூர்க்
குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த
10வெண்காழ் தாய வண்காற் பந்தர்
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்
குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே.

(பி - ம்.) 1 ‘வெருணோக்குக்’3 ‘வேட்டுவன்’ 4 - 5 ‘யுடையினை சுரையடைவானஞ்சுநுண்கோற்’6 ‘குலா புறக்’ 7 ‘வேலி