5 | இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி முயங்கினே னல்லனோ யானே மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇயினம் போல அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத் | 10 | தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர் எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர் இன்ன விறலு முளகொ னமக்கென | 15 | மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல்வலங் கடந்தோய்நின் கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே. |
(பி - ம்.) 18 ‘கழுவிளங்’ திணை - வாகை; துறை - அரசவாகை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) ஒலிக்குங் கடலாற் சூழப்பட்ட அணுச்செறிந்த அகன்ற உலகத்துக்கண் 1 தமிழப்படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண் நிலைபெற்ற உயிரதுபன்மையையும் அவ்வுயிரைக் கொள்ளுங் கூற்றினது ஒருமையையும் நின்னுடனே சீர்தூக்கிக்காட்டிய வென்றிவேலையுடைய செழிய! பெரும்புலியைப் படுக்கும் வேட்டுவன் எந்திரமறிந்து கொளுத்திய பெரிய கல்லையுடைய அடாரையும் (பி - ம். கல்லையுடைய இடியை ஒக்கும் அடாரையும்) போலுமென்று விரும்பிப் புல்லினேனல்லனோயான்? கலங்கி மலைக்கண்ணே தங்கிய குருவியினம்போல அம்புசென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையினது துளையையுடைய பெருங்கை வாயுடனே துணிந்து வீழ்ந்து கலப்பையையொப்ப நிலத்தின் மேலே புரள வெட்டிப் போர்க்களத்தின் கண்ணே வீழ்த்த ஏந்திய வாள் வெற்றியையுடையோராய் எந்தலைவனோடுகிடந்தார், எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்; இப்பெற்றிப்பட்ட வென்றியும் உளவோ நமக்கென்று சொல்லி முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ, அதுகண்டு நாணிக் கூற்றம் இரங்கிய அஞ்சத்தக்க போர்க்களத்தின்கண்ணே இருபெருவேந்தரும் ஐம்பெருவேளிருமாகிய
1 ‘‘தலைப்பெருஞ் சேனைத் தமிழச்சேரி” (பெருங். 3. 4 : 10 - 11) ; தமிழ்ப்படை - தமிழ் நாட்டரசர்களின் சேனை; நெடுஞ்செழியனோடு பொருத பகைவரெழுவரும் தமிழ்நாட்டினராதலின் தமிழ்ப்படை யென்றார்.
|