முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

8 - 13. 'இல்லது படைக்கவும் வல்ல னுள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும், இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில, வரிசையி னளிக்கவும் வல்லன்', 'மனையோள், பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூவாளே' (புறநா. 331 : 6 - 10, 334 ; 5 - 7)

14. வேட்டக்குடி - வேட்டுவர் வீடு.

15 - 6. உடும்புசெய் பாணி - உடும்புத் தோலாற் செய்த கைச்சரடு.

17. வம்பு - கச்சு.

19. கொண்டது பரிசில் - பகைவரோடு போர்செய்ததற்காக அரசரிடம் பெற்ற பொருளே பாணர் முதலியோர்க்கு அவன் கொடுக்கும் பரிசிலாகும்.

(333)

334

காமரு பழனக் கண்பி னன்ன
தூமயிர்க் குறுந்தா ணெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத் தார்ப்பிற்
படப்பொடுங் கும்மே.....பின்பு.......
5......................................................... னூரே மனையோள்
பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும்
ஊணொலி யரவமொடு கைதூ வாளே
உயர்மருப் பியானைப் புகர்முகத் தணிந்த
பொலம்......................................................................ப்
10பரிசில் பரிசிலர்க் கீய
உரவுவேற் காளையுங் கைதூ வானே.

(பி - ம்.) 5 ‘மனையோர்' 6 ‘ரோம்பும்' 7 ‘கைத்தூஉவாளே' 10 ‘பரிசிலர்'

திணையும் துறையும் அவை.

மதுரைத் தமிழக்கூத்தனார்.

(கு - ரை.) 1. கண்பு - ஒருவகைக் கோரை ; 'கண்பின், புன்காய்ச்சுண்ணம் புடைத்த மார்பின்' (பெரும்பாண். 220 - 21) ; 'களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர' (மதுரைக்.172) ; 'கண்பமல் பழனங் கமழ' (மலைபடு.454) ; 'கண்பகத்தின் வாரணமே' (தே. திருஞா. தோணிபுரம், 'வண்டரங்க' 3)

1. புறநா.333 : 3.

4. படப்பு = படப்பை - வைக்கோற்போர்.

3 - 4. 'புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பின்.....................மன்றிற் பாயும் வன்புலத் ததுவே' (புறநா.322 : 4 - 6)