முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

எழுவரது நல்ல வலியை வென்றோய்! நினது கழுவி விளங்கின முத்தாரம் அகத்திட்ட மார்பை. - எ - று.

தமிழ்தலைமயங்கியவென்புழி, தலை, அசைநிலை; இடமுமாம்.

செழிய! கடந்தோய்! நின்மார்பை யான் விரும்பி முயங்கினே னல்லனோவெனக் கூட்டுக.

பெருங்கல்லடாருமென்ற உம்மை, எமக்கு விருப்பஞ் செய்தலே யன்றி நின்பகைவர்க்கு வருத்தஞ் செய்தலான், நின்மார்பு கல்லடாரும் போலுமென எச்சவும்மையாயிற்று; சிறப்பும்மையுமாம்.

மூதிற்பெண்டிர் கசிதலால் நாணியெனவும் அழுதலாற் கண்ணோடிய எனவும் நிரனிறையாகக் கொள்க.

போர்முடிதலாற் போயின கூற்றை நாணியும் கண்ணோடியும் போயிற்றுப்போலக் கூறியது, ஓரணி (தற்குறிப்பேற்றம்) கருதிநின்றது.

இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப்படுத்தல் மறத்திற்கிழி பென்று பெண்டிர் இரங்கியழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோ டியதென்று உரைப்பாருமுளர்.

(கு - ரை.) 1. ‘இமிழ்’ என்பது ஒலித்தற்றொழிற்பண்பில் வந்ததற்கு மேற்கோள்; நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459. கிடக்கை - பூமி; ‘‘ஞாலந்தாத்திரியளக்கர் நாடுபூ தலங்கிடக்கை” என்பது நிகண்டு.

1 - 2. ‘‘இமிழ்கடல்.......தலையாலங்கானத்து என்றவழித் தலையாலம் என ஆசிரியவடியுள் இன்சீர் இயைய வெண்சீர் வந்தது” (தொல். செய். சூ. 30, பேர்.; ந.)

4. பெயரெச்சத்திற்கு முடிபாகிய பெயரை இடைவருஞ்சொற்கள் விசேடித்து நின்றதற்கு மேற்கோள்; தொல். எச்ச. சூ. 59, ந.

3 - 4. ‘‘எருமைக் கடும்பரி யூர்வோ னுயிர்த்தொகை, ஒருபக லெல்லையி னுண்ணு மென்ப, தாரிய வரச ரமர்க்களத் தழிய, நூழிலாட்டிய சூழ்கழல் வேந்தன்”, ‘‘கூற்றுக்கண் ணோட வரிந்துகளங்கொண்டோர்” (சிலப். 26 : 215 - 8, 27 : 40)

5 - 6. தினையுண் கேழ லிரியப் புனவன், சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர், ஒண்கேழ் வயப்புலி படூஉ நாடன்” (நற். 119) ; ‘‘புழைதொறு மாட்டிய விருங்க லரும்பொறி” (மலைபடு. 194) ; ‘‘கொல்புலி படுக்கும் பெருங்கனீ ளடார்வெங் குறவர்வீழ்த் திடுதலும்” (கூர்ம. சம்புத்தீவின், 29) ; ‘‘பண்ணேறு சிறுகுதலைக் கொடிச்சியருட் பதைபதைத்து நடுங்க வெய்ய, திண்ணேறுங் கொடுஞ்சினத்த செங்கண்வாலுளைமடங்கற் சிதர்ந்து வீழ, விண்ணேறு மமரருளம் வியப்பூரக் கல்லதரின் வீழ்த்தி விண்டு, தண்ணேறு மலர்த்தொடையற் குறவருறை வாமனமாந் தகைசால் குன்றும்” (இலிங்க. பிலக்கமுதலான தீவு. 54)

8 - 9. யானையின்மேல் தைத்த அம்புகளுக்கு மலைமீது தங்கிய குருவிகள் உவமை; ‘‘யானைமேல் யானை நெரிதர வானாது, கண்ணேர்