முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

ஊர்கள்:- அம்பர், அரிசில் (அரியிலூர்) , அரையம், அழும்பில், அள்ளூர், ஆடுதுறை, ஆமூர், ஆய்குடி, ஆலங்கானம், ஆலங்குடி, ஆலத்தூர், ஆவூர், இடைக்காடு, இடைக்குன்றூர், இலவந்திகைப்பள்ளி, ஈர்ந்தூர், (ஈரந்தூர்) , உறையூர், உறையூர் ஏணிச்சேரி, ஊணூர், எக்கூர், எயில், எருக்காட்டூர், எருமைவெளி, எறிச்சிலூர், (எறிச்சி) , ஐயூர், ஒக்கூர், ஒல்லையூர், கபிலநகர், கரும்பனூர், கருவூர், கழனிவாயில், கள்ளில், காவிரிப்பூம்பட்டினம், கானப்பேர் (காளையார்கோயில்) , குடவாயில், குராப்பள்ளி, குளமுற்றம், குறுங்கோழியூர், குன்றூர், கூடலூர் கோட்டம்பலம், கோவலூர், கோவூர், சிக்கற்பள்ளி, சிற்றரையம், சிறுகுடி, செந்தில், செருப்பாழி, தகடூர், தங்கால், தலையாலங்கானம், தழும்பனூர், திருப்போர் (திருப்பூர்) , துவராபதி, துறையூர், தொண்டி, நல்லூர், நாலை (நாலூர்) , 1நெய்தலங்கானல், நொச்சிநியமம், பாமுளூர், பிசிர், பிடவூர், புல்லாற்றூர், பூஞ்சாற்றூர், பெருங்குன்றூர், பேரரையம், பொருந்தில், பொறையாறு, போந்தை, மதுரை, 2மல்லி, மாங்குடி, மாவிலங்கை (இலங்கை, பெருமாவிலங்கை) , முகையலூர், முசுறி, முரஞ்சியூர், முள்ளூர், மையல், வஞ்சி, வல்லார், வாகை வாட்டாறு, விரிச்சியூர், விரியூர், விளங்கில், வீரை, வெண்குடை, வெண்ணி, வெள்ளைக்குடி, வேம்பற்றூர்.

ஊர்திவகை:- குதிரை, சகடம், தேர், யானை.

ஐதிஹ்யம்:- ஆலமரம், சுடுகாடு, தூண், மலை இவற்றில் தெய்வங்களுண்டென்றல்; மேல்கடல் பழையதென்பது.

கட்டில்வகை:- அரசுகட்டில், ஆயுதக்கட்டில், கால்கழிகட்டில், முரசுகட்டில்.

கதைகள்:- கீழ்கடல் சகரரால் தோண்டப்பட்டது, சிபி புறாவிற்காகத் துலையிலேறியது, சீதை ஆபரணங்களை முடிந்துவீழ்த்தியது, பரமசிவன் முப்புரங்களை எரித்தது, பாண்டவர் நூற்றுவரோடு போர் புரிந்தது.

கூத்துவகை:- அல்லியக்கூத்து, குரவைக்கூத்து.

கூற்றங்கள்:- மிழலைக் கூற்றம், முத்தூற்றுக்கூற்றம் (முத்தூர்க் கூற்றம்)

கோயில்கள்:- இந்திரன்கோயில், சிவாலயம், முருகக் கடவுள் கோயில்.

சாதிகள்:- அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வாணிகர் (உமணர்) , உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய்கொல்லர், பூவிலைப்பெண்டு, பொதுவிலைமகளிர், பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைப்பாகர், யானைவேட்டுவர், வடவடுகர், வண்ணாத்தி, வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர், வேடர்.


1. நெய்தல் வாயில் அல்லது நெய்வாசலென்று காவிரிப்பூம்பட்டினத்துக் கருகே ஓரூருள்ளது.

2. இப்பெயருள்ள ஊர்கள் பல.