முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

5-6. ‘‘உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன், றீவார்மேனிற்கும் புகழ்’‘ (குறள்,232) என்பதனாலும் அதற்குப் பரிமேலழகர்எழுதிய உரையாலும் ஈவார் புகழப்படுதல் அறியலாகும்.

9. சீவக.786,ந.மேற்.

10. குடுமி - முடிவு. இந்நாடு, இவன்கருதிய வண்ணமே நடக்குமென்றபடி, ‘கடும்பின் அடுகலம்.....பூவா வஞ்சியும் தருகுவன், விறலியர்......மாடமதுரையும் தருகுவன்’ எனத்தலைவன் இயல்பைக் கூறினமையால் இச்செய்யுள் இயன்மொழியாயிற்று.

(33)

34

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
5குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
10பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
15செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை
வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே.

(பி - ம்.) 11 ‘மலியப்’

திணை - வாகை; துறை - அரச வாகை.

அவனை அவர் பாடியது.

(இ - ள்.) காட்டின்கண்ணே தங்கும் வாழ்க்கையையுடைய சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன் மானினது தசையைச் சொரிந்த கடகமும் இடைமகள் தயிர்கொண்டுவந்த மிடாவும் நிறைய ஏரானுழுது உண்டு வாழ்வாரது பெரிய மனையின்கண் மகளிர் குளத்துக்