ஒள் வாள் அமலை 


56.வென்றிச் சிறப்பு

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்,  
5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

துறை:
ஒள் வாள் அமலை
வண்ணமும் தூக்கும்: அது
பெயர்:வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி  
உரை