52. மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம இன்பச் சிறப்புக் கூறுதல் | | கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து, வடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி, அருங் கலம் தரீஇயர், நீர் மிசை நிவக்கும் பெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு, மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் | 5 | மெய் புதை அரணம் எண்ணாது, எஃகு சுமந்து, முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க, உயர்நிலை உலகம் எய்தினர், பலர் பட, நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை | 10 | இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும்: இனியே, சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து, முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக, சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ | 15 | நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி; உயலும் கோதை, ஊரல்அம் தித்தி, ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை ஒள் இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி, பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப, | 20 | கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின் எறியர் ஓக்கிய சிறு செங் குவளை, 'ஈ' என இரப்பவும், ஒல்லாள்; நீ எமக்கு யாரையோ?' எனப் பெயர்வோள் கையதை: கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ | 25 | பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் யாங்கு வல்லுநையோ- வாழ்க, நின் கண்ணி!- அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்; தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட | 30 | வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே? | | துறை:குரவை நிலை வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு பெயர்:சிறு செங் குவளை | |
| |