தும்பை அரவம் 


34.வென்றிச் சிறப்பு

ஒரூஉப நின்னை  ஒரு பெரு வேந்தே!
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,
இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்:
செவ் உளைய மா ஊர்ந்து,
நெடுங் கொடிய தேர் மிசையும்,
5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,
மன் நிலத்து அமைந்த ... ... ...
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ,
10
அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த!  நீ ஓம்பல் மாறே.

துறை:
தும்பை அரவம்
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:ஒண் பொறிக் கழற் கால்  
உரை
 

83.படைச் சிறப்பு

கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும்
வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப,
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு
நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து,
செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே:
5
இன்னாது அம்ம அது தானே பல் மா
நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின்
போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து,
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே.

துறை:தும்பை அரவம்
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:பல் தோல் தொழுதி
உரை