70.வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல் | | களிறு கடைஇய தாள், மா உடற்றிய வடிம்பு, சமம் ததைந்த வேல், கல் அலைத்த தோள், வில் அலைத்த நல் வலத்து, | 5 | வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக் குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு, தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி, உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து, கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த | 10 | வலம் படு வான் கழல் வயவர் பெரும! நகையினும் பொய்யா வாய்மை, பகைவர் புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை, பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக், கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதல் | 15 | புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப! தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற, வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை; வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, | 20 | இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி, தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்! மாடோர் உறையும் உலகமும் கேட்ப இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் | 25 | அயிரை நெடு வரை போல, தொலையாதாக, நீ வாழும் நாளே! | | துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர்:பறைக் குரல் அருவி | |
|
|