பக்கம் எண் :

101

தலைதுமிந் தெஞ்சிய மெய்யாடு பறந்தலை
அந்தி மாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
பேஎ யாடும் வெல்போர்
 10 வீயா யாணர் நின்வயி னானே.

     துறை - வாகைத்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் அது. தூக்கு
- செந்தூக்கு. பெயர் - மெய்யாடு பறந்தலை (6)

     (ப - ரை) 4. வியன்களமென்றது ஒன்றான போர்க்களப் பரப்பை.

     5. 1அளகுடைச் சேவலென்றது பெடையோடு கூடின பருந்தின் சேவலை.

     6. பறந்தலையென்றது அப்பெரும்பரப்பின் உட்களத்தை.

     2குறையுடலெழுந்தாடுவது ஒரு பெயருடையார் பலர்பட்ட வழியன்றே;
அவ்வாற்றாற் பலர் பட்டமை தோன்றக் கூறிய சிறப்பான், இதற்கு, 'மெய்யாடு
பறந்தலை'
என்று பெயராயிற்று.

     8. மன்றென்றது அவ்வுட்களத்தின் நடுவை; அது 3மன்றுபோறலின
மன்றெனப்பட்டது.

     9-10. வெல்போர் வீயா யாணரென்றது வெல் பேராகிய இடையறாது
வருகின்ற செல்வமென்றவாறு. ஆன் : அசை.

     மைந்த, நின் படை அழிவுபடாமை நீ ஓம்பு வினை செய்தமையானே (1)
நின் வென்றிகளின் பெருமை (2) பிறரிடத்தின்றி நின்னிடத்தே (10)
புகழ்ச்சியமைந்தன (2) என முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     உரைசான்றன நின்வென்றியெனக் கூறினமையான் வாகைத் துறைப
பாடாணாயிற்று.

     (கு - ரை) 1. நீ ஓம்பல்மாறு - நீ பாதுகாத்தலால்.

     2. பெருமையையுடைய நின் வெற்றிகள் புகழ்ச்சியமைந்தன.

     3. வால் மருப்பு - வெள்ளிய கொம்பு

     4. உயர்ந்த தேரினது சக்கரம் தாவிய இடமகன்ற போர்க்களத்தில்

     5. பெடையையுடைய சேவலினது இனம் தசையாகிய இரையையுண்ண;
புகா -உணவு.; "மரற்புகா வருந்திய மாவெருத்திரலை" (குறுந். 232 : 3)

     6. தலை துமிந்து எஞ்சிய மெய் - தலை வெட்டப்பட எஞ்சி நின்ற
உடம்பு; கவந்தம்; துமிந்து - துமிய; எச்சத்திரிபு. பறந்தலை - உட்களம்.

     7-8. அந்திமாலைப் பொழுதின்கண் ஆகாயத்தைக் கண்டாலொத்த
சிவந்த ஒளியைக் கொண்ட இரத்தத்தையுடைய உள்ளிடத்தில்; குருதியாற்


     1அளகென்னும் பெயர் கோழி, கூகை, மயில் என்பவற்றிற்கு வரும்
(
தொல். மரபு. 55 - 6); இங்கே இடம்பற்றிப் பருந்தென்று உரை கூறினர்.

     2கம்ப. மூலபலவதைப். 228.

     3மன்று - ஊருக்கு நடுவாய் எல்லாரும் இருக்கும் மரத்தடி. (முருகு.
226, ந,)