பக்கம் எண் :

102

சிவந்த போர்க்களத்துக்குச் செவ்வானம் உவமை; "பருதிசெல் வானம்
பரந்துருகி யன்ன, குருதியா றாவதுகொல் குன்றூர்" (பு. வெ. 70)

     9-10. பேய் ஆடுதற்குக் காரணமாகிய வெல்லுகின்ற போராகிய
இடையறாது வருகின்ற புது வருவாயையுடைய நின்னிடத்து.

     நின் வயின் நின்வென்றி உரைசான்றன. பிறர் உதவியாற் பெறும்
வெற்றியன்றித் தானே பொருது தன் வலியாற்கொண்ட வெற்றியாதலின்,
'நின்னிடத்தே புகழ்ச்சி அமைந்த' என்றார்.

     (பி - ம்.) 2. பெருமநின் வென்றி. 5. அருகுடைச் சேவல், அருளுடைச்
சேவல். (5)

36. வீயா யாணர் நின்வயி னானே
தாவா தாகு மலிபெறு வயவே
மல்ல லுள்ளமொட வம்பமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
 5 பனைதடி புனத்திற் கைதடிபு பலவுடன்
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார்
மாவு மாக்களும் படுபிண முணீஇயர்
பொறித்த போலும் புள்ளி யெருத்திற்
புன்புற வெருவைப் பெடைபுணர் சேவல்
 10 குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழய
நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந்
துருவெழு கூளிய ருண்டுமகிழ்ந் தாடக்
குருதிச் செம்புன லொழுகச் செருப்பல
செய்குவை வாழ்கநின் வளனே.


     துறை - களவழி. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
வாண்மயங்கு கடுந்தார் (6)

     (ப - ரை) தலைச்சென்று (4) வம்பமர்க் கடந்து (3) என மாறிக்கூட்டுக.

     1வம்பமரென்றது முன்பு செய்துவருகின்ற போரன்றிப் பகைவர் புதிதாகப்
பகைத்துச் செய்யும் போரினை.

     6. வாள் மயங்குதலாவது இரண்டு படையில் வாளும் தம்மில் தெரியாமல்
மயங்குதல்.

     இச்சிறப்பானே இதற்கு, 'வாண்மயங்கு கடுந்தார்' என்று பெயராயிற்று.

     10. கிழக்கென்றது கீழான பள்ளங்களை.

     உள்ளமொடு வம்பமர்க் கடந்து (3) செருப்பல செய்குவை (14);


     1வம்பு - புதுமை.