|
பகைவ
ராரப் பழங்க ணருளி
நகைவ ரார நன்கலஞ் சிதறி |
5 |
ஆன்றவிந்
தடங்கிய செயிர்தீர் செம்மால்
வான்றோய் நல்லிசை யுலகமோ டுயிர்ப்பத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
மாயிரும் புடையன் மாக்கழல் புனைந்து
மன்னெயி லெறிந்து மறவர்த் தரீஇத் |
10 |
தொன்னிலைச்
சிறப்பி னின்னிழல் வாழ்நர்க்குக்
கோடற வைத்த கோடாக் கொள்கையும்
நன்றுபெரி துடையையா னீயே
வெந்திறல் வேந்தேயிவ் வுலகத் தோர்க்கே. |
துறை - செந்துறைப் பாடாண்பாடடு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - வலம்படு வென்றி (7)
(ப
- ரை) 7. வலம்படு வென்றியென்றது மேன்மேலும் பல
போர்வென்றி படுதற்கு 1அடியாகிய வென்றியென்றவாறு.
இச்சிறப்பான்
இதற்கு, 'வலம்படு வென்றி' என்று பெயராயிற்று.
செம்மால் (5)
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் (7)
மன்னெயில்களை எறிந்து அவற்றில் வாழும் மறவர்களைப் பிடித்துக் கொண்டு
(9) பழைதான நிலைமைச் சிறப்பினையுடைய நின்னிழலில் வாழும் வீரர்க்குக்
(10) 2கொடுமை அறும்படி வைத்த பிறழாக் கொள்கையும் (11) நீ மிகப்
பெரிதுடையையாயிராநின்றாய் (12); ஆதலால் வேந்தே, இவ்வுலகத்தோர்
ஆக்கத்தின் பொருட்டு (13) நின் செல்வமும் நின் வாழ்நாளும் வாழ்வனவாக
(1) எனக் கூட்டி வினை முடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவற்குள்ள குணங்களையெல்லாம் எடுத்துக்
புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. நின் செல்வமும் நின் வாழ்நாளும் வாழ்வனவாகுக.
2. உண்மையையே
மொழிகின்ற வாயையுடைய சான்றோர் நின் புகழை
உயர்த்துக்கூற; "பீடின் மன்னர்ப் புகழ்ச்சி்வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல்,
எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே" (புறநா.
148 : 5 - 7.)
3. பகைவர் நிரம்பப்
பெறும்படி துன்பத்தை அளித்து.
4. பாணர் முதலியோர்
பெறும்படி பகைவர்பாற் பெற்ற நல்ல
ஆபரணங்களை மிக வழங்கி; நகைவர் - மகிழ்ச்சிக்குக் காரணமான பாணர்
முதலியோர்.
5. நற்குணங்களால்
அமைந்து பணியவேண்டும் உயர்ந்தோரிடத்துப்
பணிந்து, ஐம்பொறிகளும் அடங்கிய குற்றம் தீர்ந்த தலைவனே.
ஆன்றவிந்தடங்கல் : புறநா. 191 : 6.
6. மிக உயர்ந்த
நல்ல புகழ் உலகம் உள்ள அளவும் அழியாமல் நிற்ப;
1அடி
- காரணம்.
2கோடு
- கொடுமை.
|