ஆதாரமாகிய
உலகம் அழியப் புகழும் அழியுமாதலின் உலக மொடுயிர்ப்ப
என்றார்.
7. வறுமை
முதலியவற்றால் நடுக்கமுற்ற தன் கீழ்க்குடிகளை
மேம்படுத்திய, மேலும் வெற்றிபெறுதற்குக் காரணமான வெற்றியையும்.
8. கரிய
பெரிய பனந்தோட்டால் ஆகிய மாலையையும் பெரிய
வீரக்கழலையும் அணிந்து.
9. பகைமன்னரது
நிலைபெற்ற மதில்களை அழித்து அவற்றிலுள்ள
மறவர்களைச் சிறைப்படுத்திக் கொணர்ந்து.
10-11.
பழைய நிலைமையான சிறப்பினையுடைய நினது நிழலில்
வாழ்வார்க்குக் கொடுமையறும்படி வைத்த மாறுபடாத கோட்பாட்டையும்.
செம்மால்
(5) நீயே (12) வென்றியும் (7) கொள்கையும் (11) உடையை (12)
13. இவ்வுலகத்தோர்க்கு-இவ்வுலகத்தோர்
ஆக்கத்தின் பொருட்டு;
உலகத்தோர் பொருட்டு வாழ்க எனக் கூட்டுக.
(பி
- ம்.) 3. பகைவராயினும். 5. செம்மல். (7)
38. |
உலகத்
தோரே பலர்மற் செல்வர்
எல்லா ருள்ளுநின் னல்லிசை மிகுமே
வளந்தலை மயங்கிய பைதிரந் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் |
5 |
எயின்முகஞ்
சிதையத் தோட்டி யேவலிற்
றோட்டி தந்த தொடிமருப் பியானைச்
செவ்வுளைக் கலிமா வீகை வான்கழற்
செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை |
10 |
வாணுதல்
கணவ மள்ள ரேறே,
மையற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவி னெஞ்சத்துப் |
15 |
பகுத்தூண்
டொகுத்த வாண்மைப்
பிறர்க்கென வாழ்தி நீ யாகன் மாறே. |
இதுவுமது.
பெயர் - பரிசிலர் வெறுக்கை (9)
(ப - ரை)
4. களங்காய்க்கண்ணி நார்முடியென்றது களங்காயாற்
செய்த கண்ணியும் நாராற் செய்த முடியுமென்றவாறு.
தான்
முடிசூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க
கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும்
செய்து கொள்ளப்பட்டனவென்றவாறு.
9.பரிசிலர்
வெறுக்கையென்றது பரிசிலர் வாழ்வென்றவாறு.
|