இச்சிறப்பான்
இதற்கு, 'பரிசிலர் வெறுக்கை' என்று பெயராயிற்று.
நாளவையுடைமையாற்
பாணர்நாளவை யென்றும் அவற்குப்
பெயராயிற்று.
சேரல்
(4) சேரலர் வேந்தே (8) பரிசிலர் வெறுக்கை, பாணர் நாளவை
(9), வாணுதல் கணவ, மள்ளரேறே (10), வசையில் செல்வ, வானவரம்ப (12),
செல்வர் உலகத்தார் பலர்மன் (1); (அச்செல்வத்தாரெல்லாம் பெற்றது ஈதெனத)்
தாவில் நெஞ்சத்துப் (14) பகுத்தூண் தொகுத்த ஆண்மையான (15) பிறர்க்கென
வாழ்தி நீயாகலான்(16), அவர்களெல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும் (2)
எனக் கூட்டி வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. உலகத்தோர் செல்வர் பலர்மன்-உலகத்தோரிற்
செல்வத்தையுடையோர் பலர்; அவரது புகழ் தோன்றாமல் மறைந்தது; மன்:
ஒழியிசைப் பொருளில் வந்தது.
2. அவ்வெல்லாருள்ளும்
நினது நல்ல புகழ் மேம்பட்டுத் தோன்றும்;
இசை ஈகையால் வந்தது.
3. செல்வங்கள்
ஒன்றோடு ஒன்று கலந்த நாட்டைச் செம்மைப்படுத்திய.
4. களங்காயாற்
செய்யப்பட்ட தலையிற் சூடும் மாலையினையும் நாராற்
செய்யப்பட்ட முடியையும் உடைய சேரனே.
5-6.
பகைவர் மதிலின் இடங்கள் அழியும்படி அங்குசத்தையுடைய
பாகன் ஏவுதலால் நாடுகாவலை நினக்குத் தந்த பூணையணிந்த
கொம்பையுடைய யானையையும். தோட்டி - அங்குசம்; இங்கே அதனையுடைய
பாகனுக்கு ஆயிற்று. தோட்டிதந்த; தோட்டி - காவல்; "நீ, உடன்றோர்
மன்னெயி றோட்டி வையா" (பதிற். 25 :
5)
'தோட்டியையுடையானைத்
தோட்டியென ஆகுபெயராயிற்று' (தொல்,
வேற்றுமைமயங்கு.33, தெய்வச்.)
7. செந்நிறம்
ஊட்டப்பட்ட தலையாட்டத்தையணிந்த மனம் செருக்கிய
குதிரைகளையும், பொன்னாற் செய்த வீரக் கழலையும்; ஈகை - பொன்.
8. செயல்
அமை கண்ணி - தொழிற்சிறப்பு அமைந்த கண்ணியையும்
உடைய.
9. பரிசிலர்
வெறுக்கை - பரிசில்பெற வருவாயையுடைய செல்வமாக
இருப்பாய் (பதிற். 15 : 21, 65 : 11).
பாணர் நாளவை - பாணரையுடைய
நாளோலக்கத்தையுடையாய்; "பாண்முற் றுகநின் னாண்மகிழிருக்கை" (புறநா.
29 : 5)
10. வாணுதல்
கணவ: பதிற். 14 : 15, உரை. மள்ளர் ஏறே
- வீரர்க்குள்
ஆண்சிங்கம் போன்றாய்.
11. குற்றமில்லாமல்
விளங்கிய வடுக்கள் ஆழ்ந்த மார்பினையுடைய.
12.
வசையில் செல்வ - பழியில்லாத செல்வத்தை யுடையாய்.
13-5.
'இனிய பொருள்களை நின்பாற் பெற்றால் அவற்றை வேறு வேறாக
அனுபவிப்போம்; தருவாயாக' என்று விரும்புவதற்கு முன்னே கெடுதியில்லாத
மனத்தோடு பிறருக்குப் பகுத்துண்ணும் உணவைச் சேரக் கொடுத்த
ஆண்மையால். இனியவை என்பது நோக்கித் தனி தனி என இயல்பாயிற்று.
|