|
விழையாப்
பகுத்தூண் எனக் கூட்டுக. ஆண்மையையுடைய நீ எனக்
கூட்டுதலும் ஒன்று.
16. நீ
பிறர்பொருட்டு வாழ்வாயாதலால்; "தனக்கென வாழாப் பிறர்க்குரி
யாளன்" (அகநா. 54 : 13: மணி.
5 : 73). மாறு: ஏதுப் பொருள் தருவதோர்
இடைச்சொல்; 'மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள் படுவதோரிடைச்
சொல்' (பதிற். 54, 9 : உரை)
பிறர்க்கென
நீ வாழ்தியாதலால் (16) எல்லாருள்ளும் நின் நல்லிசைமிகும்
(2)
(பி
- ம்.) 16. வாழ்கநீ. (8)
| 39. |
பிறர்க்கென
வாழ்தி நீ யாகன் மாறே
எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர்
துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பைக்
கறுத்த தெவ்வர் கடிமுனை யலற |
| 5 |
எடுத்தெறிந்
திரங்கு மேவல் வியன்பணை
உருமென வதிர்பட்டு முழங்கிச் செருமிக்
கடங்கா ராரரண் வாடச் செல்லும்
கால னனைய கடுஞ்சின முன்ப
வாலிதின், நூலினிழையா நுண்மயி ரிழைய |
| 10 |
பொறித்த
போலும் புள்ளி யெருத்திற்
புன்புறப் புறவின் கணநிரை யலற
அலந்தலை வேலத் துலவை யஞ்சினைச்
சிலம்பி கோலிய வலங்கற் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத் |
| 15 |
தவிரிழை
தைஇ மின்னுமிழ் பிலங்கச்
சீர்மிகு முத்தந் தைஇய
நார்முடிச் சேரனின் போர்நிழற் புகன்றே. |
துறை
- வாகை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - ஏவல்
வியன்பணை (5)
(ப - ரை)
2. எமக்கிலென்னார் நின் மறங்கூறு 1குழாத்தரென்றது
நின்படைப் குழாத்திற் படைத்தலைவர் நீ பிறர்க்கென வாழ்தியாகையால்,
அவரும் தம்பால் இரந்து சென்றார்க்கு 2எமக்கு இல்லையென்று
மறாரென்றவாறு.
1குழாமென்றது
படையையாதலின் குழாத்தர் படைவீரர்கள் ஆயினர்.
2குறள்,
223 பரிமேல்.
விசேட.
|