5.
எடுத்தெறியவெனத் திரிக்க. ஏவல் வியன்பணை யென்றது எடுத்த
1வினை முடிந்ததெனாது மேன்மேலும் படையைக் கடிமுனைக் கண்
2ஏவுதலையுடைய முரசென்றவாறு.
இச்சிறப்பான்
இதற்கு, 'ஏவல் வியன்பணை' என்று பெயராயிற்று.
9. இழைய
போர்வை (13) எனக்கூட்டுக. 11. புறவின் கணநிரையலறுதல்,
அப்போர்வையை 3வலையெனக் கருதி அலறுதல்.
12. உலவையஞ்சினையென்றது
உலந்த சிறு கொம்பினையுடைய
பெருங்கொம்பினை.
14. இலங்கு
மணிமிடைந்த பசும்பொற் படலமென்றது விளிம்பு
மணியழுத்திய பொற்றகட்டாற் செய்த கூட்டினை.
15. அவிரிழை
தைஇயென்றது விளங்கின நூலாலே முத்தைக்
கோத்தென்றவாறு.
போர்வையின்
(13) முத்தந் தைஇய (16) என்றது அப்போர்வையை
முத்தாற் சூழுமாறுபோல அக்கூட்டினைச் செறிந்த நார்முடியின் 4பொல்லாங்கு
குறைதற்கு முத்துவடங்களைச் சூழ்ந்தவென்றவாறு.
போர்வையின்
(13) முத்தந் தைஇய (16) பசும்பொற்படலத்து (14) நார்முடி
(17) என்று மாறிக் கூட்டுக.
17. நின்
போராகிய நிழலை என்றும் உளவாகவேண்டுமென்று விரும்பி
யென்றவாறு 5போரை நிழலென்றது அப்போர் மறவரது ஆக்கத்திற்குக்
காரணமாகலின்.
முன்ப
(8), சேரல் (17), நீ பிறர்க்கென வாழ்தியாகலான் (1), நின்மறங்கூறு
குழாத்தர் (2) நின் போர் நிழற் புகன்று (17) எமக்கு இல்லை யென்னார் (2)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இனி இதற்குப்
பிறவாறு கூட்டி வேறு பொருள் உரைப்பாருமுளர்.
இதனாற்
சொல்லியது அவன் கொடைச்சிறப்பும் அவன் வென்றிச்
சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
அம்மறவரவது
கொடைக்குக் காரணம் அவன் வென்றியாகலின்
துறைவாகையாயிற்று.
(கு
- ரை) 2. நின் மறம் கூறு குழாத்தர் எமக்கு இல்
என்னார்-நின்னுடைய வீரத்தை எடுத்துச் சொல்லும் படைவீரர் தம்மிடத்து
இரந்து சென்ற எமக்கு இல்லையென்று சொல்லார்; "நின் படைகொண்மாக்கள்.....................கூவை
துற்ற நாற்காற் பந்தர்ச், சிறுமனை
வாழக்கையி னொரீஇ வருநர்க், குதவி யாற்று நண்பிற் பண்புடை,
ஊழிற்றாகநின் செய்கை" (புறநா. 29 : 17
- 22)
3. துப்புத்துறை
போகிய - பகைமையின் துறைகளை யெல்லாம் முடித்த.
வெப்புடைத் தும்பை - வெம்மையையுடைய போர்க்குரிய தும்பை மாலையைச்
சூடிய.
1வினை-போர்.
2பதிற்.
54 - 13 உரை.
3"கொலைவல்
வேட்டவன் வலைபுரிந்து போகிய, கானப் புறவின்"
சேவல் வாய்நூற், சிலம்பி யஞ்சினை வெரூஉம், அலங்க லுலவையுங்காடு" (நற்.
189 : 7 - 10)
4பொல்லாங்கு
- குறை.
5“போரெனிற்
புகலும் புனைகழன் மறவர்” (புறநா.
31 : 9, குறிப்புரை.)
|